Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!

மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!

By: Monisha Sun, 01 Nov 2020 4:40:31 PM

மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!

பொதுவாக ஆண்களுக்கு தாங்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. அது கணவன், மனைவி, காதலன், காதலி உறவாக இருந்தாலும் சரி, அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவாக இருந்தாலும் சரி, மாப்பிள்ளை பெண்ணெடுத்த வீடு என்ற உறவாக இருந்தாலும் சரி தாங்கள் சற்றே கெத்தாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆனால், நீங்கள் ஒரு பெண் அல்லது உங்கள் மனைவியின் மனதில் ஓர் உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும். அப்படி நாம் விட்டு கொடுத்து சந்தோசத்துடன் வாழ வைக்கும் சில உண்மையை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, துவைத்த துணியை மடித்து வைப்பது, சுப காரியங்கள் என்றால் அதிகமாக வேலை செய்வது என இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன்னென்றால் இன்று இல்லறத்தின் மேன்மைக்காக பெண்களும் ஆண்களுடன் பங்கெடுத்துக் கொள்ளும் போது இல்லற வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாக இருக்கிறோம் என்பதை தாண்டி, ஆண்களும் சமப்பங்கு வேலை செய்வதில் எந்த தவறும் இல்லை.

wife,husband,relationship,happiness,respect ,மனைவி,கணவன்,உறவு,சந்தோசம்,மரியாதை

குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகள் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் கணவன், மனைவிக்குள் சில விஷயங்களை விட்டு கொடுத்து சென்றால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். கணவன் மனைவியை அடிமை போல் நடத்தாமல் அன்புடன் நடத்த வேண்டும். மேலும் உங்கள் மனைவி உங்களிடம் பேசும் போது அவர்கள் சொல்வதை நன்றாக கவனியுங்கள். நீங்கள் மரியாதை கொடுக்கும் போது அதை நினைத்து பெருமிதம் கொள்வார்கள்.

பெண்கள் என்றாலே பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உடன் பணிபுரியும் பெண்களுடன் கிசுகிசு பேசுவது, மற்றவர் மீது பொறாமை படுவது, மற்றவர்களை விமர்சனம் செய்வதை தான் பெரும்பாலும் செய்து வருகின்றனர் என்ற பேச்சை மாற்ற வேண்டும். ஆண்களுக்கு எவ்வளவு குடைச்சலும், தொந்தரவுகளும் இருக்குமோ அதே போல் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும் இருக்கும் என ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உங்கள் மனைவியிடம் உள்ள தனித்திறமையை உணர்ந்து, மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியிடம் பொய் சொல்வதை தவிருங்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும், மனைவியின் பிறந்த வீட்டினரை அவமானப்படுத்தும்படி பேசாதீர்கள். இதனால் அவர்கள் மனதில் உங்கள் வீட்டினரை பழி வாங்கும் வெறுப்புணர்ச்சியாக மாறி விடக்கூடும்.

wife,husband,relationship,happiness,respect ,மனைவி,கணவன்,உறவு,சந்தோசம்,மரியாதை

பெண்களை நீங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆள நினைத்தால், அவர்கள் உங்கள் மனதினுள் வர மாட்டார்கள். எனவே, அவர்களது உரிமையில் கை வைக்க கூடாது. மேலும், அவர்களது உரிமை, சுதந்திரம் அவர்களுக்கே உரித்தானது. ஆண்கள் வெறும் பாது காவலர்களே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் மனைவியின் பிறந்த நாளையும், உங்கள் திருமண நாளையும் நினைவில் வைத்து, அந்த நாட்களில் அவர்களை கோவிலுக்கோ அல்லது அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல மறவாதீர்கள். மற்ற நாட்களை விட, இதுப் போன்ற நாட்களில் கணவனுடன் இருப்பதை அவர்கள் அதிகம் விரும்புவார்கள். மேலும் அவர்கள் எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு பிடித்த துணி வகைகளை பரிசாக அளித்து அவர்களை மகிழ்ச்சியுற செய்யுங்கள்.

பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும். பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் முக்கியமாக ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்களை நீங்கள் உங்கள் மனைவியிடம் ஒப்புக்கொண்டால் உங்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பும்.

Tags :
|