Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

By: Karunakaran Wed, 11 Nov 2020 5:34:30 PM

குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். வயது அதிகரிக்க தொடங்கியதும் தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்வார்கள். குழந்தைகள் கோபமாக இருந்தாலோ, தங்களுக்கு பிடித்தமானவற்றை கேட்டு அடம் பிடித்து அழுதாலோ சிறிது நேரம் அமைதியாக இருங்கள். பெற்றோர் தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் அவர்களிடத்தில் வெளிப்படும். அதேநேரத்தில் பெற்றோர் எப்படியும் தங்களை அரவணைப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கும்.

சில குழந்தைகள் கோபமாக இருந்தால் சத்தம் போட்டு பேசுவார்கள். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தரையில் போட்டு உடைக்கவும் செய்வார்கள். இத்தகைய போக்கு மோசமானது. அந்த சமயத்தில் பொறுமை காப்பது மிக அவசியமானது. அந்த அளவுக்கு குழந்தைகள் ஏன் விரக்தி அடைகிறார்கள் என்பதை கண்டறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் ஏதாவதொரு கட்டத்தில் பொய் சொல்வார்கள். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் அதுவே பழக்கமாகிபோய்விடும். குழந்தைகள் பொய் சொல்லும்போது அவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும்.

nurture,children,grow,parents , நல்வழி வழிமுறை, குழந்தைகள், வளருங்கள், பெற்றோர்

எது தவறு? எது சரி? என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கி புரியவையுங்கள். குழந்தைகள் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுடன் சண்டை போடுவது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் வழக்கம். நீண்டகாலமாக கவனிக்காமல் விட்டால் அவர்களுக்குள் வெறுப்புணர்வு குடிகொண்டுவிடும். அப்படி சண்டை போடுவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ இடம் கொடுக்கக்கூடாது. கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கிக்கூற வேண்டும்.

செல்போன், டேப்லெட், வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் சாதனங்களை குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக பல பெற்றோர் அவற்றை வாங்கிக்கொடுக்க செய்கிறார்கள். குழந்தைகளை சாப்பிடவைப்பதற்கு டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலையும் இருக்கிறது. அதை பார்த்துக்கொண்டு குழந்தைகள் வேகமாக சாப்பிடுவார்கள். அதனால் தங்களின் வேலையும் எளிதாகிறது என்று பெற்றோர் நினைக்கலாம். நீண்டகாலமாக இந்த வழக்கத்தை தொடர்வது குழந்தைகளை மின்னணு சாதனங்களுக்கு அடிமைப்படுத்திவிடும். வெளிப்புற விளையாட்டுகள், இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

Tags :
|