Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்

பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்

By: Karunakaran Thu, 19 Nov 2020 3:22:42 PM

பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்

தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம் என ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகளை பாலியல் நிபுணர்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அதில் வெளியான அதிரடி தகவல் என்னவென்றால், 35 வயதுப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதே வயதுடைய ஆண்களில் 55 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

25-30 வயது என்பது, வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருக்கிறது. எனவே பெரும்பாலும் ஆண்கள் கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். ஒரு குழந்தை போதுமென்றும், தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்தக் கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் ஆர்வம் குறைந்து விடுகிறது.

marital desires,women,age,couples ,தாம்பத்திய ஆசைகள், பெண்கள், வயது, தம்பதிகள்

இப்படி எல்லாம் இருந்தாலும் 35 வயதை நெருங்கும்போது பெண்கள் அதிக தாம்பத்திய ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். இருந்தாலும்கூட அப்போது அவர்களின் குழந்தைகளும் வளரிளம் பருவத்தை அடைகிறார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள். 30 வயதுகளில் பெண்களுக்கு தாம்பத்திய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அனுதின பிரச்சினைகள், அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை குறைக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

40 வயதுகளில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் பாலியல் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது. ஐம்பது வயதுகளில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் பாலியல் ஆர்வத்தை குறைக்கிறது இந்தப் பருவம். இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்திய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தம்பதிகளிடம் இணக்கமும், மகிழ்ச்சியும் உருவாக தாம்பத்தியம் தேவைப்படுகிறது.


Tags :
|
|