Advertisement

சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?

By: Monisha Sat, 07 Nov 2020 7:15:01 PM

சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?

நம்மில் பலருக்கும் சந்தோசமான வாழ்க்கை என்றால் ஏதோ மிகப்பெரிய பணக்காரர்களால் மட்டும்தான் அப்படி வாழ முடியும் என நினைக்கிறோம். சந்தோசம் என்பது வெறும் பணத்தில் மட்டுமல்ல. இதை நாம் பலமுறை பலரும் சொல்ல கேட்டிருந்தாலும் அதை நம்முடைய மனது ஏற்க மறுக்கிறது. எப்படி நாம் அழுத்தி சொன்னாலும் மனம் அந்த கருத்தை விட்டு வெளியில் வர மாறுகிறது.

பணம் இருந்தால் மட்டுமே நம்மால் நினைத்த அனைத்தையும் வாங்க முடியும். அதன் மூலமே சந்தோசமாக இருக்க முடியும் என நினைக்கிறோம். நம்முடைய எல்லா நினைவுகளும் அதையே நினைத்து கொண்டிருப்பதால் பணமே வாழ்க்கை என நினைக்கிறோம். எளிதில் சொல்லவேண்டுமானால் எல்லாவற்றிற்கும் ஆசை. அதிக பணத்தோடு இருப்பவர்கள் அனைவரும் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என நினைக்கிறோம். அவர்களின் தினசரி வாழ்க்கையை கூடவே இருந்து சில நாள்கள் நீங்கள் பார்த்தல் போதும் உங்களுக்கு புரியும். அப்படியானால் சந்தோசமான வாழ்க்கைக்கு என்ன வேண்டும். எளிதாக சொல்ல வேண்டுமானால் மனது.

mind,happiness,life,love,hope ,மனது,சந்தோசம்,வாழ்க்கை,அன்பு,நம்பிக்கை

உங்கள் மனது சந்தோசமாக இருந்தால் போதும் நீங்களே பெரும் பணக்காரர். சந்தோசம் நம்மை சுற்றிலும் இருப்பதிலிருந்து வருகிறது. நம்முடைய குடும்பத்தார், நண்பர்கள், பணி செய்யும் இடங்களில் இருப்பவர்கள். கிடைக்கும் ஒவ்வொரு தருணங்களையும் நாம் சந்தோசமாக கொண்டாட வேண்டும். உடன் இருப்பவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும்.

விலங்குகள் பறவைகளை பாருங்கள் உங்களுக்கே புரியும். எந்த சூழ்நிலையிலும் அவைகள் தங்கள் சந்தோசத்தை அடுத்தவர்களுக்கு கொடுப்பதில்லை. ஒவ்வொரு நிமிடங்களையும் சந்தோசமாக அனுபவிக்கின்றன. எனக்கு இது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என பொறாமை கொள்வதில்லை. தங்கள் வாழ்க்கையில் இயல்பாக இருக்கிறது.

mind,happiness,life,love,hope ,மனது,சந்தோசம்,வாழ்க்கை,அன்பு,நம்பிக்கை

ஏன் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை. காரணம் நம்முடைய மனிதர்கள் சூழ்ந்த உலகு தற்பொழுது போட்டி, பொறாமை, வஞ்சகம் போன்ற சதோசத்தை கெடுக்கும் விஷயங்களை மட்டும் கூடவே கொண்டு நடக்கிறது. சந்தோசத்திற்கு தேவையான எந்த ஒரு விஷயத்தையும் ஏற்க மனித மனம் தற்பொழுது மறுக்கிறது. ஒரே ஓட்டம் எதற்கு ஓடுகிறோம் ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுகிறோம். மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாம் தற்பொழுது ஓரிரு நொடிகள் மட்டுமே.

மீண்டும் போட்டி பொறாமை நிறைந்த உலகில் கூடவே நாமும் ஓடுகிறோம். ஒவ்வொரு இரவும் தொலைத்த சந்தோசத்தை தேடுகிறோம் தூக்கத்தை தொலைக்கிறோம். தேடி களைத்து மனஅமைதியை தொலைத்து மறுநாள் மீண்டும் ஓடுகிறோம். இதுதான் வாழ்க்கை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நம்மை குறுக்கி விடுகிறோம். சந்தோசமாக இருப்பவர்களை கண்டால் பிழைக்க தெரியாதவன் என்கிறோம். ஓடி முடித்து கடைசியில் முதுமை விழ கூன் விழ சந்தோசத்தை மட்டும் காணவில்லை.

mind,happiness,life,love,hope ,மனது,சந்தோசம்,வாழ்க்கை,அன்பு,நம்பிக்கை

பணம் தேவைதான் ஆனால் உங்கள் சந்தோசத்தை அடகு வைத்தல்ல. படிப்பும் அறிவும் நமக்கு கிடைத்தது நாம் நம்முடைய வாழ்க்கையை எப்படி சந்தோசமாக வாழ வேண்டுமென. கிடைக்கும் கொஞ்சம் நேரங்களில் சந்தோசமாக இருப்போம். எல்லோரிடமும் அன்பை செலுத்துவோம். நாம் நம்முடைய சந்தோசத்தை இழக்க இழக்க நம்முடைய உலகத்தையும் இழக்கிறோம், அழிக்கிறோம் பலரின் அதீத ஆசையே நம்முடைய உலகை அழித்து கொண்டிருக்கிறது.

வருங்கால நம்முடைய செல்வங்களுக்கு என்ன மீதி வைத்திருக்கிறோம் என கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். வரும் தலைமுறையை சந்தோசம் என்றால் என்ன என கேட்க வைக்காமல் இருப்பதே நாம் செய்யும் மிக சிறந்த உதவி. அன்பை பரிசளிப்போம். நாமும் சந்தோசமாக இருப்போம் பிறரையும் சந்தோசமாக வைத்திருப்போம். உலகை அழகானதாக மாற்றுவோம்!!

Tags :
|
|
|