Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • ஆண்களுக்கு எந்த விஷயங்களில் எல்லாம் பாராட்டுக்கள் பிடிக்காது??

ஆண்களுக்கு எந்த விஷயங்களில் எல்லாம் பாராட்டுக்கள் பிடிக்காது??

By: Monisha Fri, 25 Sept 2020 1:32:16 PM

ஆண்களுக்கு எந்த விஷயங்களில் எல்லாம் பாராட்டுக்கள் பிடிக்காது??

அனைவரும் எப்போதும் அவரவர் துணையிடமிருந்து நிறைய உதவிகளை பெறுவோம். அவ்வாறு பெறும் போது, அவர்கள் உதவியதற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புவோம். ஆனால் அவ்வாறு தெரிவிக்கும் போது, சில செயல்களை செய்வதால் வாழ்த்தும் பாராட்டுக்களானது, சிலசமயங்களில் கேட்கும் போது கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும். அதற்காக புகழக்கூடாது என்பதில்லை.

ஆண்களுக்கு புகழ்ச்சிகள் சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. சிலசமயங்களில் மட்டும் தான் பிடிக்கும். பெரும்பாலான ஆண்களுக்கு தேவையில்லாத புகழ்ச்சிகள் பிடிக்காது. அதிலும் படுக்கையறையில் இருக்கும் போது, சந்தோஷப்படுத்துவதில் சூப்பர் என்று சொன்னால், அது அவர்களை இன்னும் உற்சாகமூட்டி, அந்த உறவை இன்னும் பலப்படுத்தும். ஆனால், அதையே அவர்கள் ஏதாவது சிறு விஷயமான, துணியை மடித்து வைக்கும் போது, பாராட்டினால், அது அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும். சரி, இப்போது ஆண்களுக்கு எந்த விஷயங்களில் எல்லாம் பாராட்டுக்கள் பிடிக்காது என்று பார்ப்போமா!

men,compliments,love,relationship,women ,ஆண்கள்,பாராட்டுக்கள்,புகழ்ச்சிகள்,உறவு,பெண்கள்

பொதுவாக பெண்களுக்கு புகழ்ச்சிகள் மிகவும் பிடிக்கும். அதிலும் துணை அவளிடம், "நீ மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பதால் தான், உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்லுட்ம போது, அது பெண்களுக்கு பெரும் கௌரவமாக இருக்கும். ஆனால் அதையே ஆண்களிடம் சொல்லச் சொல்ல, அது சிலசமயங்களில் அவர்களின் குணத்தையே மாற்றிவிடும். ஏனெனில் ஆண்கள் மிகவும் முரட்டுத்தனமானவர்கள். எனவே முடிந்த அளவில், இந்த மாதிரி சொல்வதை தவிர்க்கவும்.

"நீ ரொம்ப எமோசனல்" என்று சொல்வது. பொதுவாக ஆண்கள் அவர்களது உணர்ச்சியை பெரும்பாலும் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் அவ்வாறு, அவர்கள் ஒருமுறை உங்கள் முன் அழுதுவிட்டாலும், அதை வைத்து, அவர்களை, மற்றவர்கள் முன், சொன்னால், அது அவர்களை மனதில் காயப்படுத்தும். எனவே எப்போதும் வெளியே மற்றவர்கள் முன், இவ்வாறு சொல்வதை தவிர்க்க வேண்டும்.

men,compliments,love,relationship,women ,ஆண்கள்,பாராட்டுக்கள்,புகழ்ச்சிகள்,உறவு,பெண்கள்

"உன் தொப்பை சூப்பராக இருக்கு" என்பது. யாராக இருந்தாலும், ஒருவரின் உடல் தோற்றத்தைப் பற்றி வித்தியாசமாக கிண்டல் அடிப்பது போன்று சொன்னால், அது அவர்களை வருத்தமடையச் செய்வதோடு, ஒருவித வெறுப்பையும் உண்டாக்கும். ஆகவே மற்றவர்கள் முன்பு, இவ்வாறு கிண்டல் அடிப்பது போன்று புகழ்வதை தவிர்க்கவும்.

" உன்ன மாதிரி யாரும் வீட்டு வேலை செய்யமாட்டாங்கடா செல்லம்" என்று கூறுவது. பொதுவாக ஆண்கள் இத்தகைய புகழ்ச்சியை விரும்பமாட்டார்கள். முதலில் ஆண்கள் வீட்டு வேலை செய்யும் போது உதவுவதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். அதைவிட்டு, மற்றவர்கள் முன், இந்த கூற்றை கூறினால் அது அவர்களை காயப்படுத்தி, பின் அவர்கள் இந்த மாதிரியான செயல்களை செய்யவேமாட்டார்கள்.

Tags :
|
|