Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைக்கு அருண் லால் ஆதங்கம்

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைக்கு அருண் லால் ஆதங்கம்

By: Karunakaran Tue, 04 Aug 2020 4:54:27 PM

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைக்கு அருண் லால் ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறையில், 60 வயதிற்கு மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபடக்கூடாது எனவும், மாத்திரிகைள் எடுத்துக் கொண்டு வருபவர்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கட்டாயம் கலந்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள 65 வயதுடைய அருண் லால், புற்றுநோயை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில் வயதிற்கு மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபடக்கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வழிகாட்டு நெறிமுறையின் படி, அவரால் பயிற்சியாளராக செயல்பட முடியாது.

arun lal,bcci,training,domestic cricketers ,அருண் லால், பி.சி.சி.ஐ., பயிற்சி, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள்

இந்நிலையில் இதுகுறித்து அருண் லால் கூறுகையில், பிரதமருக்கு 69 வயதாகிறது. தற்போதைய நேரத்தில் அவர் நாட்டை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை பதவி விலக சொல்கிறீர்களா? ஒரு நபராக நான் பெங்கால் அணியின் பயிற்சியாளராக இருப்பேனா அல்லது இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனல், என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இன்னும் 30 வருடத்திற்கு அறைக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் நான் மேற்கொள்வேன். தேவையில்லாமல் முட்டாள்தனமாக எந்த செயல்களும் நடக்காது. நான் மிகவும் கட்டுக்கோப்பாகவும், வலிமையாகவும் இருக்கிறேன். உண்மையிலேயே இதுபோன்று கட்டுக்கோப்பாக நான் இருந்தது இல்லை. நான் இது குறித்து கவலைப்படவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags :
|