Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கொல்கத்தா அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

கொல்கத்தா அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

By: Karunakaran Tue, 13 Oct 2020 1:05:03 PM

கொல்கத்தா அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சீரான வேகத்தில் ரன்கள் அடித்தனர்.

தேவ்தத் படிக்கல் 32 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி 15 ஓவரில் 111 ரன்களே எடுத்திருந்தது. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 33 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 33 பந்தில் 73 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

bangalore,kolkata,82 runs,ipl 2020 ,பெங்களூர், கொல்கத்தா, 82 ரன்கள், ஐ.பி.எல் 2020

பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. டாம் பேண்டன், ஷுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஷுப்மான் கில் மட்டும் தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

கடைசியாக கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூர் அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர், மாரிஸ் தலா 2 விக்கெட்டும், நவ்தீப் சைனி, மொகமது சிராஜ், சஹல், உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags :