Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டில்லி அணிக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தது பெங்களூரு அணி

டில்லி அணிக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தது பெங்களூரு அணி

By: Nagaraj Mon, 05 Oct 2020 7:26:05 PM

டில்லி அணிக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தது பெங்களூரு அணி

இன்றைய ஐ.பி.எல்., போட்டியில் டில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டத்தில் டில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

amit mishra,bangalore team,delhi team,bowling ,அமித் மிஸ்ரா, பெங்களூர் அணி, டில்லி அணி, பந்து வீச்சு

பெங்களூரு அணியில் ஆடம் ஸாம்பா, குர்கீரத் மான் ஆகியோருக்குப் பதில் மொயீன் அலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் டில்லி அணியில் காயம் காரணமாக அமித் மிஸ்ரா விலகியுள்ளதால் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஷார்ஜாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணி பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :