Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி படுதோல்வி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி படுதோல்வி

By: Karunakaran Tue, 06 Oct 2020 2:18:00 PM

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி படுதோல்வி


ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செயதது. டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 23 பந்தில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 42 ரன்கள் விளாசி சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார்.

ஷிகர் தவான் 28 பந்தில் 32 ரன் குவித்து உடானா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 இக்சர்கள் உள்பட 53 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

bangalore team,59 runs,delhi team,ipl ,பெங்களூர் அணி, 59 ரன்கள், டெல்லி அணி, ஐ.பி.எல்

பின்னர் 197 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதேபோல் 13 ரன் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் வெளியேறினார். கேப்டன் விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடி 43 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுதோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.

Tags :