Advertisement

பெங்களூர் அணியின் அதிரடியில் 164 ரன்கள் குவிப்பு

By: Nagaraj Wed, 28 Oct 2020 10:15:22 PM

பெங்களூர் அணியின் அதிரடியில் 164 ரன்கள் குவிப்பு

164 ரன்கள் குவித்த பெங்களூர் அணி... மும்பைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 164 ரன்கள் அடித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிவருகின்றது . இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் படிக்கல் - பிலிப் கூட்டணி களமிறங்கியது. இருவரும் அதிரடியாக விளையாட , 33 ரன்களில் பிலிப் தனது விக்கெட்டை இழந்தார்.

mumbai team,bowling,164 runs,bangalore team,field ,மும்பை அணி, பந்து வீச்சு, 164 ரன்கள், பெங்களூர் அணி, களம்

இவரைத்தொடர்ந்து கேப்டன் விராட் 9 ரன்கள் , வில்லியர்ஸ் 15 ரன்கள்,துபே 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்கள். ஒருபுறம் சிறப்பாக விளையாடிய படிக்கல் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய மோரிஸ் , 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது. களத்தில் சுந்தர் 10 ரன்களுடனும், குர்கீரத் சிங் 14 ரன்களுடனும் இருந்தனர். 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது. மும்பை அணியின் பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Tags :