Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:38:34 PM

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களுர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

துயாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்மித் 57 ரன்களும், உத்தப்பா 41 ரன்களும் சேர்த்தனர். பெங்களூர் தரப்பில் மோரீஸ் 4 விக்கெட்டுக்களையும், சஹால் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

bangalore team,ipl,rajasthan,great victory ,பெங்களூர் அணி, ஐ.பி.எல், ராஜஸ்தான், அபார வெற்றி

178 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றியுடன் பெங்களூர் அணியில், தேவ்தத்-பின்ச் ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை விளாசிய பின்ச், 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து வந்த கோலி நிதானமாக ஆடி, தேவ்தத்துடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 37 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களை சேர்த்த தேவதத், திவேத்தியா பந்துவீச்சில் வெளியேறினார். சிறிது நேரத்திலேயே 43 ரன்கள் எடுத்திருந்த போது, தியாகி பந்துவீச்சில் கோலியும் நடையை கட்டினார்.

தொடர்ந்து களமிறங்கிய டெவிலியர்ஸ் வழக்கம்போல் தனது பாணியில், ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். 6 சிக்ஸர்கள் உட்பட 22 பந்துகளில் டெவிலியர்ஸ் 55 ரன்களை சேர்க்க, 19.4 ஓவர்களில் பெங்களூர் அணி வெற்றி பெற்று, தொடரில் 6வது வெற்றியை பதிவு செய்தது.

Tags :
|