Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

By: Karunakaran Sun, 09 Aug 2020 1:01:04 PM

நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.

விக்டோரியா மாகாணத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

boxing day test,melbourne,australia,india ,குத்துச்சண்டை நாள் டெஸ்ட், மெல்போர்ன், ஆஸ்திரேலியா, இந்தியா

இதுகுறித்து தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி நேற்று பேட்டி அளித்தபோது, ஆஸ்திரேலிய விளையாட்டு அட்டவணையில் ‘பாக்சிங் டே’ போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும். இந்த போட்டிக்கு இன்னும் 4½ மாதங்கள் உள்ளன. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Tags :