Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் 200-வது சிக்சரை எட்டி சாதனை

கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் 200-வது சிக்சரை எட்டி சாதனை

By: Karunakaran Mon, 26 Oct 2020 2:26:43 PM

கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் 200-வது சிக்சரை எட்டி சாதனை

ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்.சி.பி. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. விராட் கோலி 50 ரன்களும், டி வில்லியர்ஸ் 39 ரன்களும் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.

சி.எஸ்.கே.வுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஒரு சிக்சர் அடித்தார். ஐ.பி.எல் போட்டியில் அவரது 200-வது சிக்சர் ஆகும். 180-வது இன்னிங்சில் அவர் இதை எடுத்தார். 200-வது சிக்சர் அடித்த 5-வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய வீரர்களில் டோனி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

rcb,csk,virat kohli,200th six ,ஆர்.சி.பி., சி.எஸ்.கே, விராட் கோலி, 200 வது சிக்சர்

ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்களில் முதலில் கிறிஸ் கெய்ல் - 336 சிக்சரும், டிவில்லியர்ஸ் - 231 சிக்சருடன் 2-வதாகவும், டோனி - 216 சிக்சருடன் 3-வது இடத்திலும், ரோகித் சர்மா - 209 சிக்சருடன் 4-வது இடத்திலும், விராட் கோலி - 200 சிக்சருடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.

நேற்று நடந்த ஆட்டத்தின் இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருத்துராஜ் கெய்க்வாட் 51 பந்தில் 65 ரன்களும், எம்எஸ் டோனி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தோல்வியால் ஆர்சிபி-யின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.

Tags :
|
|