Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து வீடியோ வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து வீடியோ வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

By: Karunakaran Sat, 01 Aug 2020 7:44:12 PM

தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து வீடியோ வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்தியாவில் மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் ஐபிஎல் கிரிக்கெட் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். எப்போதும் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது தனுஷ் பாடலை வைத்து வீடியோ செய்து வெளியிட்டுள்ளது.

chennai super kings,video,dhanush song,rakita rakita ,சென்னை சூப்பர் கிங்ஸ், வீடியோ, தனுஷ் பாடல், ரகிதா ரகிதா

தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் ‘ரகிட ரகிட’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த பாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

Tags :
|