Advertisement

ஹைதராபாத்துடன் இன்று மல்லுக்கட்டும் சென்னை அணி

By: Nagaraj Tue, 13 Oct 2020 1:58:59 PM

ஹைதராபாத்துடன் இன்று மல்லுக்கட்டும் சென்னை அணி

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளதால் சென்னை அணி அதிரடியாக ஆடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

7 போட்டிகளில் சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது. இன்றைய போட்டியுடன் சேர்த்து எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு உள்ளது. அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

crisis,hyderabad,chennai team,today,dubai ,நெருக்கடி, ஹைதராபாத், சென்னை அணி, இன்று, துபாய்

சென்னை - ஹைதராபாத் அணிகள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 9 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 4 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தது.

அதேபோல் சென்னை அணி கடந்த 2 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தின் மூலம் சிக்கலில் உள்ளது. இதனால் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இன்று களம் காணவுள்ளார்கள்.

Tags :
|
|