Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் களம் இறங்கும் சென்னை அணி

ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் களம் இறங்கும் சென்னை அணி

By: Karunakaran Mon, 12 Oct 2020 6:11:43 PM

ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் களம் இறங்கும் சென்னை அணி

அடுத்த ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்ஸ் சுற்றை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் 29-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை துபாய் ஆடுகளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை சென்னை அணி முதல் பாதி போட்டிகளில் இப்படி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையை எதிர்கொண்டது கிடையாது.

ஆர்.சி.பி.க்கு எதிரான தோல்விக்குப்பின் பேட்டியளித்த எம்எஸ் டோனி, சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒன்றை சரி செய்தால் மற்றொன்று உருவாகிறது எனக் கூறினார். துபாய் ஆடுகளம் சற்று கடினமான ஆடுகளம். முதலில் பேட்டிங் செய்தால் 170 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். முதலில் பந்து வீசினால் 150 முதல் 160 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி என்றால்தான் வெற்றியை நினைத்து பார்க்க முடியும்.

chennai team,field,hyderabad team,ipl 2020 ,சென்னை அணி, புலம், ஹைதராபாத் அணி, ஐ.பி.எல் 2020

டு பிளிஸ்சிஸ், வாட்சன் பவர் பிளேயில் ரன்கள் அடிக்கா விட்டாலும் இருவரும் களத்தில் நின்றாலே அது சென்னை அணிக்கு சாதகம்தான். டோனியின் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் ஹிட்டர் இல்லாதது அணிக்கு பலவீனமாக இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 3-ல் வெற்றி 4-ல் தோல்வியோடு 5-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் அந்த அணிக்கு முதுகெலும்பே வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர்தான்.

வார்னர் முதலில் பேட்டிங் எடுத்து 170 முதல் 180 ரன்கள் அடித்து, அதற்குள் சிஎஸ்கே-வை கட்டுப்படுத்த முயற்சிப்பார். கேன் வில்லியம்சனுக்கு அதிக பந்துகள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதிக்க வேண்டும் என்றால் இவரது பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கடைசி கட்டத்தில் ரஷித் கான் பந்து வீச்சு எடுபடாததால் தோல்வியை சந்தித்தது. புவி காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு மிப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது. கலீல் அகமது, சந்தீப் சர்மா நேர்த்தியாக பந்து வீசுவது கடினம்.

Tags :
|