Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே

பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே

By: Karunakaran Sat, 24 Oct 2020 3:36:32 PM

பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாமல் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஏற்றார் பொல்லார்ட். டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார் பொல்லார்ட்.

இந்தத் தொடர் முழுவதுமே பீல்டிங் தேர்வு செய்த அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. வாழ்வா? சாவா? போட்டியில் சென்னைக்கு அணிக்கு சற்று வழியை திறந்து விட்டார் என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப் போகிறார் என்பதை சென்னை ரசிகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். சென்னை அணி 170-க்கு மேல் அடித்துவிடும் என நினைத்து டி.வி.க்கு முன் சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட உட்கார்ந்தனர்.

csk,play-off,ipl2020,dubai ,சி.எஸ்.கே, பிளே-ஆஃப், ஐ.பி.எல் 2020, துபாய்

அனுபவ வீரர்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் இருந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என டோனி கூறியிருந்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், என். ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கினார். டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் களம் இறங்கி பவர் பிளேயை உற்சாகப்படுத்துவார் என நினைக்கையில் டோனி கெய்க்வாட்டை களமிறக்கினார். அப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் ஜர்க் ஆகினர். தொடர் தோல்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் டோனியின் இந்த முதல் தவறு முற்றிலும் தவறாக அமைந்தது.

ஜடேஜா 7 ரன்னிலும், வழக்கம்போல எம்எஸ் தோனி 16 ரன்னிலும் நடையை கட்ட, 30 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே. சாம் கரன் கடைசி வரை போராடி 52 ரன்கள் அடிக்க பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையுடன் பந்து வீசும் அளவிற்கு 114 ரன்கள் அடித்தது. 12.2 ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது. இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.

Tags :
|