Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக டெல்லி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக டெல்லி பேட்டிங் தேர்வு

By: Karunakaran Wed, 14 Oct 2020 7:49:30 PM

ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக டெல்லி பேட்டிங் தேர்வு

துபாயில் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்றார்.

அதன்படி, ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி அணியில் 1. பிரித்வி ஷா, 2. தவான், 3. அன்ரிச் நோர்ஜே, 4. ரகானே, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மார்கஸ் ஸ்டெய்னிஸ், 7. அலேக்ஸ் கேரி, 8. அக்சார் பட்டேல், 9. அஸ்வின், 10, துஷார் தேஷ்பாண்டே, 11. ரபடா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

delhi team,batting,rajasthan,30th league match ,டெல்லி அணி, பேட்டிங், ராஜஸ்தான், 30 வது லீக் போட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், 1. பென் ஸ்டோக்ஸ், 2 பட்லர், 3. ஸ்மித், 4. சஞ்சு சாம்சன், 5. ராபின் உத்தப்பா, 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. உனத்கட், 11. கார்த்திக் தியாகி ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

கடந்த ஆட்டத்தில் மும்பை அணியில் டெல்லி அணி தோற்றத்தால், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து சறுக்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் இந்த முறை வெற்றியை கைப்பற்ற டெல்லி அணி தீவிர முயற்சி செய்யும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ், பட்லர், ஸ்மித் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

Tags :