Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தான் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி

ராஜஸ்தான் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி

By: Karunakaran Thu, 15 Oct 2020 11:41:06 AM

ராஜஸ்தான் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 ரன்களும், அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இரு வீரர்களும் அதிரடியாக ஆடினர். 9 பந்துகளை சந்திது 1 சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 22 ரன்கள் குவித்த பட்லர் நோர்ட்ஜீ பந்து வீச்சில் அவுட் ஆனார்.

delhi capitals,rajasthan,13 runs,ipl 2020 ,டெல்லி கேப்பிட்டல்ஸ்,ராஜஸ்தான்,13 ரன்கள்,ஐபிஎல் 2020

அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர், சஞ்சுவ் சாம்சங்குடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா, சஞ்சுவ் சாம்சங்குடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். 18 பந்துகளை சந்தித்த சஞ்சுவ் சாம்சங் 2 சிக்சர் உள்பட 25 ரன்னிலும், 27 பந்துகளை சந்தித்த உத்தப்பா 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 32 ரன் குவித்து வெளியேறினார்.

இறுதி கட்டத்தில் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. 18 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் எடுத்திருந்த ராகுல் தேவாட்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி அடைந்தது.

Tags :