Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

By: Karunakaran Sat, 10 Oct 2020 2:52:45 PM

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜாவில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை தாண்டும் வாய்ப்பை பெற்றது. இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.

delhi capitals,46 runs,rajasthan,ipl 2020 ,டெல்லி தலைநகரங்கள், 46 ரன்கள், ராஜஸ்தான், ஐபிஎல் 2020

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஓரளவு தாக்குப் பிடித்து 34 ரன்கள் அடித்து வெளியேறினார். ஸ்மித் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். டெல்லி அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தியதால், ராஜஸ்தான் அணியினர் ரன்கள் எடுக்கத் தவறினர். மற்ற ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ராகுல் டெவாட்டியா கடைசி வரை போராடினார். அவர் 38 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 138 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், அஷ்வின், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த சீசனில் இதுவரை நடந்த ஆட்டங்களில் டெல்லி அணி ஒருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :