Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

By: Karunakaran Sun, 09 Aug 2020 12:11:00 PM

முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

மான்செஸ்டரில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்றது.முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி 326 ரன்கள் குவித்தது. அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடியபோது, 219 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றபோது, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 137 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து திணறியது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியபோது, யாசீர் ஷா 33 ரன்கள் அடித்தார். அதன்பின், பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது.

england,pakistan,3 wickets,first test match ,இங்கிலாந்து, பாகிஸ்தான், 3 விக்கெட், முதல் டெஸ்ட் போட்டி


பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ரன்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்கத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசியதால், இங்கிலாந்து அணி 117 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி பொறுப்புடன் ஆடி இருவரும் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து ஆடிய வோக்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Tags :