Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ரோஹித் சர்மவை ‘வடா பாவ்’ என அழைத்த சேவாக்கிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

ரோஹித் சர்மவை ‘வடா பாவ்’ என அழைத்த சேவாக்கிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

By: Karunakaran Tue, 27 Oct 2020 10:53:35 AM

ரோஹித் சர்மவை ‘வடா பாவ்’ என அழைத்த சேவாக்கிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின், ஐபிஎல் கிரிக்கெட் அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு அங்கு நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் கிரிக்கெட் வீரர்கள் உடல் எடை போட்டது.

ஐபிஎல் தொடரின் ஆரம்பித்த பின்னர்தான் ஒவ்வொரு வீரர்களும் குண்டு குண்டாக இருந்தது தெரியவந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் சவுரப் திவாரி ஆகியோர் பெரிய அளவில் குண்டாக தெரிந்தனர். தற்போது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

condemned,sehwag,rohit sharma,vada pav ,கண்டனம், சேவாக், ரோஹித் சர்மா, வட பாவ்

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் சவுரப் திவாரி தற்போது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுரப் திவாரியை அவர் ‘சமோசா பாவ்’ என கிண்டல் செய்திருந்தார். தற்போது சென்னை அணிக்கெதிதராக ரோகித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை.

இந்நிலையில் சென்னை அணிக்கெதிதராக ரோகித் சர்மா இடம் பெறாத நிலையில் அவரது பிட்னெஸ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசுகையில், ‘வடா பாவ்’ என ரோகித் சர்மாவை அழைத்தார். ‘வடா பாவ்’ என்பது பன்னில் உருளைக்கிழங்கு மசாலா போன்டாவை சேர்த்து விற்கப்படும் மும்பையின் சிறந்த சாலையோர உணவாகும். தற்போது, ரோகித் சர்மா ரசிகர்கள் ரோகித் சர்மாவை வடா பாவ் என அழைத்ததற்கு சேவாக்கை கடுமையாக திட்டி வருகின்றனர்.

Tags :
|