Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கிய தோனியை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ

வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கிய தோனியை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ

By: Nagaraj Tue, 06 Oct 2020 6:58:48 PM

வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கிய தோனியை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ

வாட்சனுக்கு வாய்ப்பை வழங்கிய தோனிக்கு பாராட்டுக்கள். ஷேன் வாட்சன் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ பாராட்டியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் முதல் 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. முதல் நான்கு போட்டிகளில் மொத்தமாக 52 ரன்கள் மட்டுமே வாட்சன் அடித்தார்.

வாட்சனின் ஆட்டத்தை பார்த்த பிறகு, சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

praise,brett lee,watson,opportunity,dhoni,hope ,பாராட்டு, பிரட் லீ, வாட்சன், வாய்ப்பு, தோனி, நம்பிக்கை

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாட்சனை களமிறக்குவாரா என்று கேள்விகள் எழுப்பட்டன. ஆனால் தோனி சிஎஸ்கே அணியில் எந்த மாற்றாத்தையும் செய்யவில்லை. அந்தப் போட்டியில் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி விக்கெட்டையே இழக்காமல் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தனர்.

வாட்சன் 83 ரன்களும், டூ பிளசிஸ் 87 ரன்களும் அடித்தனர். சிஎஸ்கேவின் வெற்றிக்கு பின்னர், வாட்சனை ஆதரித்ததற்காக தோனியை பாராட்டினார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ. இந்த முடிவு, சிஎஸ்கேவுக்கு 2 ஆவது வெற்றியைக் கொடுத்தது என்றும் கூறினார்.

மேலும், "எம்.எஸ்.தோனியைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், அவர் தனது வீரர்களை நம்புகிறார். அவருடைய நம்பிக்கை அணியில் உள்ள 11 பேருக்கும் நம்பிக்கையை தருகிறது. வாட்சனுக்கு வாய்ப்பை வழங்கிய தோனிக்கு பாராட்டுக்கள். ஷேன் வாட்சன் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்". இவ்வாறு அவர் பாராட்டி உள்ளார்.

Tags :
|
|
|