Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • முன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துக்களை தகர்ந்தெறிந்த இந்திய வீரர்கள்

முன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துக்களை தகர்ந்தெறிந்த இந்திய வீரர்கள்

By: Karunakaran Tue, 29 Dec 2020 1:51:31 PM

முன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துக்களை தகர்ந்தெறிந்த இந்திய வீரர்கள்

பாக்சிங்டே டெஸ்டில் இந்திய அணியில் பேட்ஸ்மேன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் அறிமுகமானார்கள். இதில் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இதில் அவர் லபுஸ்சேன், கேமருன் கிரீன், ஹெட் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீர்த்தினார். அதேபோல் சுப்மன்கில் முதல் இன்னிங்சில் 45 ரன்னும், 2-வது இன்னிங்சில் 35 ரன்னும் எடுத்தார்.

மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணியில் மோதிய 100-வது போட்டியாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்று இருக்கிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் இந்தியா 4-வது வெற்றியை பெற்றது.

marquez,michael vaughan,indian players,australia ,மார்க்வெஸ், மைக்கேல் வாகன், இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியா

இதற்கு முன்பு 1977-ம் ஆண்டு பி‌ஷன்சிங்பேடி தலைமையில் 222 ரன்கள் வித்தியாசத்திலும், 1981-ம் ஆண்டு கவாஸ்கர் தலைமையில் 59 ரன் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டு விராட்கோலி தலைமையில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது ரஹானே தலைமையில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி கேப்டன் விராட்கோலி மனைவி அனுஷ்கா சர்மா குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து அவர் முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு நாடு திரும்பினார்.

இதனால் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார். முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டதாலும், கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியதாலும் டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக இழக்கும் என்று முன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனை தகர்ந்தெறிந்து இந்திய வீரர்கள் கோலி இல்லாமல் ரஹானே தலைமையில் சாதித்து இருக்கிறார்கள்.


Tags :