Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது - எம்எஸ் டோனி

கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது - எம்எஸ் டோனி

By: Karunakaran Sat, 24 Oct 2020 3:36:59 PM

கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது - எம்எஸ் டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பாக இருந்த நேற்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண்டர் ஆனது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் தோல்வி குறித்து தோனி கூறுகையில், இந்த தோல்வி வலிக்கிறது. எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும். இந்த சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் இதுவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம் என்று கூறினார்.

எப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லையோ அப்போதெல்லாம் மிடில் ஆர்டர் மீது அழுத்தம் கூடியது. கிரிக்கெட்டில் உங்களுக்கு கடினமான கட்டம் வரும்போது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அமைய வேண்டும். ஆனால் இந்த தொடரில் அது எங்களுக்கு அமையவில்லை. நம்மால் இயலக்கூடிய முழு பலத்தை திரட்டி விளையாடுகிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை எனில் கஷ்டம்தான் என டோனி கூறினார்.

captain,ms dhoni,ipl 2020,csk ,கேப்டன், எம்.எஸ் தோனி, ஐ.பி.எல் 2020, சி.எஸ்.கே.

எப்பொழுதும் முடிவு நமக்கு சாதகமாக அமையும் என்பது கிடையாது. இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம்தான். இருப்பதிலேயே கடினமான ஒன்று வருத்தத்தில் இருக்கும் சமயத்தில் சிரித்துக்கொண்டே கஷ்டமான சூழலை எதிர்கொள்வது. நிர்வாகம் பெரிதாக பதட்டம் ஆகவில்லை. அடுத்த சீசனை பற்றி யோசிக்க வேண்டும். விளையாடும் மைதானம் எப்படி, எந்த மாதிரி வீரர்கள் தேவை என ஆராய வேண்டும். அடுத்த மூன்று போட்டிகள் அதற்கு பயன்படும். அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம் என டோனி தெரிவித்தார்.

மேலும் அவர், அடுத்ததாக விளையாட உள்ள மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும். கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம் என பேசி முடித்தார்.

Tags :