Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

By: Karunakaran Fri, 06 Nov 2020 08:21:32 AM

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று இரவு 7. 30 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில், புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

புள்ளிபட்டியலில் ஒரு கட்டத்தில் 7-வது இடத்தில் இருந்த ஐதராபாத் அணி கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறியது. ஐதராபாத்துக்கு நிகராக உள்ள ஒரு அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். முதல் 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றிகளை குவித்த அந்த அணி கடைசி 4 ஆட்டங்களில் சறுக்கி பின்னடைவுக்குள்ளானது. ரன்ரேட் அதிர்ஷ்டத்தால் ஒரு வழியாக பிளே-ஆப் சுற்றை அடைந்தது.

ipl,hyderabad,bangalore team,knockout round ,ஐ.பி.எல்., ஹைதராபாத், பெங்களூர் அணி, நாக் அவுட் சுற்று

இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி அந்த தாகத்தை தணிப்பதற்கான முதற்படிக்கட்டு இந்த ஆட்டமாகும். பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், தேவ்தத்படிக்கல் ஆகிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும். இவர்கள் 3 பேரும் சோடை போனால் பெங்களூரு நிலைமை கந்தல் தான். வேகப்பந்து வீச்சில் 7 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சரியான வேகப்பந்து வீச்சு கூட்டணி இதுவரை அமையவில்லை.

இரு அணிகளும் சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டங்களில் முதலில் 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவும், 2-வது முறை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தும் வெற்றி பெற்றிருந்தன. ஐதராபாத் அணியில், வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன் ஆகியோர் உள்ளனர்.

பெங்களூரு அணியில், ஜோஷ் பிலிப் அல்லது ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது அல்லது நவ்தீப் சைனி, உதனா ஆகியோர் உள்ளனர்.

Tags :
|