Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். தொடரில் இன்றைய களத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐ.பி.எல். தொடரில் இன்றைய களத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதல்

By: Nagaraj Tue, 06 Oct 2020 08:58:33 AM

ஐ.பி.எல். தொடரில் இன்றைய களத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதல்

இன்றைய போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அபுதாபியில் இன்று நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

நடப்பு தொடரில் முதல் ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோல்வியடைந்த மும்பை அணி 2-வது லீக்கில் 49 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பெங்களூருவிடம் தோல்வியை சந்தித்த மும்பை, அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப் ஐதராபாத் அணிகளை வீழ்த்தி வெற்றி கண்டது.

மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, பொல்லார்ட், இஷான் கிஷன், குயின்டான் டி காக், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் என அனைவரும் பேட்டிங்கில் மிரட்டி வருகின்றனர்.

mumbai,rajasthan team,clash,crisis,sharjah,stumble ,மும்பை, ராஜஸ்தான் அணி, மோதல், நெருக்கடி, சார்ஜா, தடுமாற்றம்

பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன், பும்ரா, ராகுல் சாஹர் ஆகியோர் எதிரணியினரை மிரட்டி வருகிறார்கள். முந்தைய 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் மும்பை அணி களம் இறங்குகிறது.

தனது முதல் இரு ஆட்டங்களில் சென்னையையும், 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும் தோற்கடித்த முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த 2 ஆட்டங்களில், 37 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.

சிறிய மைதானமான சார்ஜாவில் தொடர்ச்சியாக 2 வெற்றியை ருசித்த ராஜஸ்தான் அணி மற்ற 2 மைதானங்களிலும் (துபாய், அபுதாபி) தடுமாறி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது.

Tags :
|
|
|