Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடக்கம்

11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடக்கம்

By: Karunakaran Fri, 20 Nov 2020 12:50:32 PM

11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான இதில் முதல் 3 ஆண்டுகளில் 8 அணிகளும், அதன் பிறகு 10 அணிகளும் கலந்து கொண்டன. கடந்த சீசனில் நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கியது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான (2020-21) 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. அங்குள்ள பதோர்டா ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், பாம்போலிம் ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியம், வாஸ்கோ திலக் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது.

isl,11 teams,ootball match,goa ,ஐ.எஸ்.எல்., 11 அணிகள், ஓட்பால் போட்டி, கோவா

இந்த சீசனுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), மும்பை சிட்டி, எப்.சி.கோவா, பெங்களூரு எப்.சி., ஒடிசா எப்.சி., ஐதராபாத் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகியவற்றுடன் 11-வது அணியாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக இணைந்து இருக்கிறது. அத்துடன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன், அங்குள்ள நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கால்பந்து கிளப்பான மோகன் பகான் கைகோர்த்து இருக்கிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இதுவாகும். பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது.

Tags :
|