Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது மகிழ்ச்சி - ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது மகிழ்ச்சி - ரோகித் சர்மா

By: Karunakaran Sun, 22 Nov 2020 5:23:38 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது மகிழ்ச்சி - ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 11ந்தேதி இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.

விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட இடது தோள்பட்டை காயத்தினால் ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

test match,australia,rohit sharma,india ,டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியா, ரோஹித் சர்மா, இந்தியா

டெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா தாயகம் திரும்பி, ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி தீபாவளி பண்டிகை கழிந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 19ந்தேதி காலை சென்றார். அவர் காயத்தில் இருந்து முழு அளவில் விடுபடுவதற்காக சென்றுள்ளார். இதில் 100 சதவீதம் குணம் அடைவதற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்படும்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடாத சூழலில், தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா களம் இறங்குகிறார். இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது. இதுபற்றி ரோகித் சர்மா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது என்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயம். எந்த வரிசையில் நான் விளையாட வேண்டும் என அணி விரும்புகிறதோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே என்று கூறினார்.

Tags :