Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி

By: Karunakaran Thu, 01 Oct 2020 2:09:07 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 10-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அந்த்ரே ரஸல் 24 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

kolkata,rajasthan royals,37 runs,ipl ,கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், 37 ரன்கள், ஐ.பி.எல்

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். 7 பந்துகள் ஆடிய ஸ்மித் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags :