Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறிய கொல்கத்தா அணி

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறிய கொல்கத்தா அணி

By: Karunakaran Mon, 02 Nov 2020 08:34:27 AM

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறிய கொல்கத்தா அணி

துபாயில் நடந்த ஐபிஎல் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

நிதிஷ் ராணா டக் அவுட்டானார். ஷுப்மான் கில் 36 ரன்னிலும், ராகுல் திரிபாதி 39 ரன்னிலும் வெளியேறினர். தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆக, அந்த்ரே ரஸல் 25 ரன்கள் எடுத்தார். கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 68 ரன்கள் விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்துள்ளது.

kolkata,rajasthan,points table,ipl 2020 ,கொல்கத்தா, ராஜஸ்தான், புள்ளிகள் அட்டவணை, ஐபிஎல் 2020

பின்னர், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். முதலில் இருந்தே கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் பந்து வீச்சில் மிரட்டினார். முன்னணி ஆட்டக்காரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். உத்தப்பா 6 ரன், ஸ்டோக்ஸ் 18 ரன், ஸ்மித் 4 ரன், சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டாகினட். ரியான் பராக் டக் அவுட்டானார்.

ஜோஸ் பட்லர் ஓரளவு தாக்குப் பிடித்து 35 ரன்னில் அவுட்டானார். ராகுல் தெவாட்டியா 31 ரன்னில் வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.


Tags :