Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூரு அணி பவுலர்களின் மிரட்டல் பந்து வீச்சில் 84 ரன்கள் மட்டுமே எடுத்த கோல்கட்டா

பெங்களூரு அணி பவுலர்களின் மிரட்டல் பந்து வீச்சில் 84 ரன்கள் மட்டுமே எடுத்த கோல்கட்டா

By: Nagaraj Wed, 21 Oct 2020 10:44:37 PM

பெங்களூரு அணி பவுலர்களின் மிரட்டல் பந்து வீச்சில் 84 ரன்கள் மட்டுமே எடுத்த கோல்கட்டா

பெங்களூரு பவுலர்களின் மிரட்டல் பந்து வீச்சில் கோல்கட்டா அணி சீட்டு கட்டு கோபுரம் போல் சரிந்து விழுந்தது. 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 84 ரன் மட்டும் எடுத்தது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு, இயான் மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன், பேட்டிங் தேர்வு செய்தார்.

ball,intimidation,kolkata,curled,ipl ,பந்து வீச்சு, மிரட்டல், கோல்கட்டா, சுருண்டது, ஐபிஎல்

கோல்கட்டா அணியில் ஆன்ட்ரி ரசல், ஷிவம் மாவி நீக்கப்பட்டு, டாம் பான்டன், பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணியில் ஷாபாஸ் அகமதுவுக்குப் பதில் முகமது சிராஜ் இடம் பெற்றார். கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில்(1), திரிபாதி (1) ஜோடி துவக்கம் கொடுத்தனர்.

சிராஜ் வேகத்தில் ராணா (0) போல்டானார். மீண்டும் வந்த சிராஜ், இம்முறை பான்டனை (10) வெளியேற்றினார். தினேஷ் கார்த்திக் (4), கம்மின்ஸ் (4) நீடிக்கவில்லை. மார்கன் 30 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (12) ரன் அவுட்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 84 ரன் மட்டும் எடுத்தது. பெங்களூரு சார்பில் சிராஜ் 3, சகால் 2 விக்கெட் சாய்த்தனர்.

Tags :
|
|