Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு

சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு

By: Karunakaran Wed, 07 Oct 2020 7:47:34 PM

சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு

13-வது ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19-ஆம் தேதி ஐபிஎல் போட்டி முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்நிலையில், 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கு 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, சென்னை அணி முதலில் பந்து வீசவுள்ளது. சென்னை அணி கடந்த ஆட்டத்தில் அதிரடியாக பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றியை பெற தீவிர முயற்சி செய்யும்.

kolkata,toss,batting,chennai ,கொல்கத்தா, டாஸ், பேட்டிங், சென்னை அணி

இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ, சாம் கர்ரன், ஷர்துல் தாக்குர், சர்மா, தீபக் சஹர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஷுப்மான் கில், சுனில் நரைன், நிதிஷ் ரானா, ஆண்ட்ரு ரசல், தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், பேட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, ஷிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Tags :
|