Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பார்முலா 1 கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் கிராண்ட் பிரி போட்டியில் லிவிஸ் ஹாமில்டன் வெற்றி

பார்முலா 1 கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் கிராண்ட் பிரி போட்டியில் லிவிஸ் ஹாமில்டன் வெற்றி

By: Karunakaran Mon, 03 Aug 2020 3:07:29 PM

பார்முலா 1 கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் கிராண்ட் பிரி போட்டியில் லிவிஸ் ஹாமில்டன் வெற்றி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த பல்வேறு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்தும் செய்யப்பட்டன. தற்போது படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் போட்டிகள் நடத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பார்முலா 1 கார் பந்தயத்தின் பிரட்டிஷ் கிராண்ட் பிரி நேற்று நடைபெற்றது. இந்த கார் பந்தயத்தில் மெர்சிடஸ் வீரர் லிவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். இது பிரிட்டிஷ் கிராண்ட் பிரியில் ஹாமில்டனின் 7-வது வெற்றியாகும்.

lewis hamilton,british grand prix,formula 1,car race ,லிவிஸ் ஹாமில்டன், பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ், ஃபார்முலா 1, கார் ரேஸ்

பிரட்டிஷ் கிராண்ட் பிரியில் வெற்றி பெற்றதுடன் ஹாமில்டன் ஒட்டு மொத்தமாக 87-வது வெற்றியை ருசித்துள்ளார். இன்னும் ஹாமில்டன் நான்கு கிராண்ட் பிரியை வென்றால் கார்பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை முறியடிக்கலாம்.

பிரிட்டிஷ் கிராண்ட் பிரியில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வருடத்திற்கான பார்முலா 1-ல் இதுவரை நான்கு கிராண்ட் பிரி நடைபெற்றுள்ளது. இவற்றில் மெர்சிடஸ் வீரர் லிவிஸ் ஹாமில்டன் மூன்று முறை வென்றுள்ளார்.

Tags :