Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் 2020 கோப்பையை வெல்ல மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சை

ஐபிஎல் 2020 கோப்பையை வெல்ல மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சை

By: Karunakaran Mon, 09 Nov 2020 3:55:39 PM

ஐபிஎல் 2020 கோப்பையை வெல்ல மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சை

13--வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் மாதம் 19--ந் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 3--ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

இதன் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளேஆப் சுற்று 5--ந் தேதி தொடங்கியது. ’குவாலிபையர்-1’ ஆட்டத்தில் மும்பை அணி 57 ரன்னில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது.

mumbai,delhi teams,ipl 2020,trophy ,மும்பை, டெல்லி அணிகள், ஐபிஎல் 2020, கோப்பை

நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் டெல்லி அணி 17 ரன்னில் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது. இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்--ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 6--வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது.

தற்போது மும்பை அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. இந்த சீசனில் மும்பை அணி 3 முறை டெல்லியை வீழ்த்தி இருந்தது. டெல்லி அணி, மும்பையை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் ஆடும். இருஅணியிலும் அதிரடியான வீரர்கள் உள்ளனர். இதனால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|