Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

By: Karunakaran Fri, 02 Oct 2020 2:50:10 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது ஆட்டம் நேற்று அபுதாபியில் நடைபெற்றபோது, மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி டாக், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே காட்ரெல் வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் குவிண்டன் டி காக் டக் அவுட் ஆனார்.

ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 45 பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். 17 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி ஹர்திக், பொல்லார்டு ஜோடியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பின்னர், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கேப்டர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

mumbai indians,kings xi punjab,48 runs,ipl ,மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், 48 ரன்கள், ஐ.பி.எல்

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கேப்டர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் மும்பை வீரர் ராகுல் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. மும்பை தரப்பில் பேட்டிசன், பும்ரா, ராகுல் சாஹர் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விரைவாகவே வெளியேறியது பஞ்சாப் அணிக்கு பலத்தை குறைத்தது.

Tags :