Advertisement

நடைப்பயிற்சி இயந்திரத்தில் கால்பந்தை உதைத்து புதிய சாதனை

By: Nagaraj Sun, 02 Aug 2020 8:20:02 PM

நடைப்பயிற்சி இயந்திரத்தில் கால்பந்தை உதைத்து புதிய சாதனை

புதிய கின்னஸ் சாதனை செய்து அசத்தியுள்ளார் வெனிசுலாவை சேர்ந்த கால்பந்து வீராங்கனை.

வெனிசுலாவைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஒருவர் தனது உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில் இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் 170 முறை தன் காலால் பந்தை உதைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

new record,treadmill,athlete,venezuela ,புதிய சாதனை, டிரெட் மில், வீராங்கனை, வெனிசுலா

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற லாரா பிண்டா என்ற அந்த வீராங்கனை இந்த சாதனையை செய்ய தொடர்ந்து 10 நாட்கள் தீவிர பயிற்சி எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஓடிக் கொண்டிருக்கும் டிரெட்மில் இயந்திரத்தில் காலால் பந்தை விடாமல் தொடர்ந்து அடித்து கொண்டிருப்பது போட்டியின் விதியாகும். இதற்கு முன்பு ஒரு நிமிடத்திற்கு 120 முறை செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை வெனிசுலா வீராங்கனை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

Tags :