Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்த நியூசிலாந்து அணி

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்த நியூசிலாந்து அணி

By: Karunakaran Wed, 30 Dec 2020 11:54:11 PM

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்த நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி இந்த வருடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஐந்திலும் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.

அப்போது ஆஸ்திரேலியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் தசம புள்ளி அளவிலேயே இடைவெளி இருந்தது. மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.

new zealand,icc rankings,cricket history,pakistan ,நியூசிலாந்து, ஐ.சி.சி தரவரிசை, கிரிக்கெட் வரலாறு, பாக்கிஸ்தான்

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து முதல் போட்டியில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் அதிகப்படியான ரன்களை பெற்று புள்ளிபட்டியலில் உயர்ந்துள்ளது.

இதனால் நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.


Tags :