Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

By: Karunakaran Mon, 19 Oct 2020 1:18:55 PM

இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 38 ரன்களுக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்தனர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

punjab team,mumbai team,second super over,ipl 2020 ,பஞ்சாப் அணி, மும்பை அணி, இரண்டாவது சூப்பர் ஓவர், ஐபிஎல் 2020

அகர்வால் 11 ரன்னிலும், கிரிஸ் கெயில் 24 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தி, 77 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் கிடைக்க போட்டி மீண்டும் சமனானது. இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags :