Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி

By: Nagaraj Fri, 16 Oct 2020 09:09:14 AM

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி

நேற்றைய ஐ.பி.எல் தொடரில் கடைசிப் பந்தில் பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரன் சிக்ஸா் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தாா்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினா் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியினரை வென்றனா்.

மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசிப் பந்தில் பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரன் சிக்ஸா் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தாா். டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பெங்களூா் அணியினா் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தனா்.

பஞ்சாப்புக்கு தொடக்க ஆட்டக்காரராக கெயில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம்போல் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

punjab,action,bangalore team,ipl,win ,
பஞ்சாப், அதிரடி, பெங்களூர் அணி, ஐ.பி.எல், வெற்றி

இந்த முறையும் ராகுல் மற்றும் அகர்வால் நல்ல தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் அகர்வால் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, களமிறங்கிய கெயில் ராகுலுடன் இணைந்து அதிரடி காட்டினார். இருவரும் சிக்ஸர்களாக பறக்கவிட பஞ்சாப் வெற்றி எளிதானது.

கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், எளிதில் வெற்றி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் 3 பந்துகளில் கெயில் 1 ரன் மட்டுமே எடுத்தார். 4-வது பந்தில் ரன் ஏதும் இல்லை. 5-வது பந்தில் கெயில் ரன் அவுட் ஆனார்.

இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. புதிதாகக் களமிறங்கிய பூரன் சிக்ஸர் அடிக்க பஞ்சாப் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியினா் 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்தனா். ஆட்டநாயகன் விருதை ராகுல் வென்றார். கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. கெயில் 45 பந்துகளில் 53 ரன்களும், ராகுல் 49 பந்துகளில் 61 ரன்களும் எடுத்தனர்.

Tags :
|
|
|