Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கோப்பையை வென்றால் புட்டா மொம்மா டான்ஸ் ஆடுவேன் - டேவிட் வார்னர்

ஐபிஎல் கோப்பையை வென்றால் புட்டா மொம்மா டான்ஸ் ஆடுவேன் - டேவிட் வார்னர்

By: Karunakaran Sun, 08 Nov 2020 8:04:43 PM

ஐபிஎல் கோப்பையை வென்றால் புட்டா மொம்மா டான்ஸ் ஆடுவேன் - டேவிட் வார்னர்

ஐபிஎல் குவாலிபையர்-2 இன்று அபு தாபியில் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும். இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார் .

டேவிட் வார்னர் கொரோனா காலத்தில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆடல், பாடல் என டிக்டாக்கில் கலக்கினார். மேலும், வார்னர் அவரது மனைவியுடன் சேர்ந்து தெலுங்கின் பிரபல பாடலான ‘புட்டா பொம்மா’ விற்கு ஆட்டம் போட்டிருந்தார். இதில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இதனை கண்டு ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

putta momma,david warner,ipl 2020,hydrabad team ,புட்டா போம்மா, டேவிட் வார்னர், ஐபிஎல் 2020, ஹைதராபாத் அணி

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் உள்ளார். கடைசி நான்கு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று குவாலிபையர் 2-ல் டெல்லியை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

இந்நிலையில் வார்னர், இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றால் ‘புட்டா பொம்மா’ டான்ஸ் ஆட்டம் உண்டு என வார்னர் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார். இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அந்த அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இன்று டெல்லி அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags :