Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் உள்ள ராஜஸ்தான் அணி

டெல்லி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் உள்ள ராஜஸ்தான் அணி

By: Karunakaran Thu, 08 Oct 2020 5:38:05 PM

டெல்லி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் உள்ள ராஜஸ்தான் அணி

13-வது ஐபிஎல் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வெற்றியோடு தொடங்கிய அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆகும். அதன்பின் டெல்லி அணி மூன்றில் இரண்டு வெற்றியை ருசித்து நான்கு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டு பரிதாபமாக 7-வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 20 முறைகள் மோதியுள்ளன. இதில் டெல்லி 9 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்த வரைக்கும் முதல் இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

rajasthan,hat-trick,defeat,delhi ,ராஜஸ்தான், ஹாட்ரிக், தோல்வி, டெல்லி

ராஜஸ்தான் அணியில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார். இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்விகளை தழுவியது. அந்த அணியில் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரில் இருவர் நன்றாக விளையாடினால் மட்டுமே மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும் என்ற நிலை உள்ளது. இதுதான் அந்த அணிக்கு பின்னடைவாகும்.

ராகுல் டெவாட்டியா, ஆர்சர் கடைசி நேரத்தில் அணிக்கு கைக்கொடுக்கின்றதால், தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியம். பந்து வீச்சில் ஆர்சர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளார். இன்னும் அந்த அணி பந்து வீச்சில் சரியான காம்பினேசன் அணியை உருவாக்கவில்லை. டெல்லி அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. அணிக்கு மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சாளர்களான ரபடா, நோர்ஜே. இருவரும் பவுன்சர், ஸ்பேஸ், யார்க்கர் என அசத்துகிறார்கள். இதனால் டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

Tags :
|