Advertisement

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

By: Nagaraj Sun, 11 Oct 2020 8:33:04 PM

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி... ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டிவாட்டியா, பராக் இணைந்து கடைசி நேரத்தில் அசத்த, ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐ தராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றார்.

ஐதராபாத் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோவ் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பேர்ஸ்டோவ் 16 ரன் எடுத்தார். வார்னர் 48 ரன்னுக்கு அவுட்டானார். மணிஷ் பாண்டே (54) அரைசதம் அடித்தார். கடைசி நேரததில் ராஜஸ்தான் பவுலிங் சிறப்பாக அமைய ஐதராபாத் ஸ்கோர் உயரவே இல்லை. ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டும் எடுத்தது. வில்லியம்சன் (22), பிரியம் கார்க் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

rajasthan,hyderabad teams,match,win,six ,ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள், போட்டி, வெற்றி, சிக்சர்

எளிய இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணியை 'டாப் ஆர்டர்' பேட்டிங் கைவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 5 ரன்னுக்கு அவுட்டானார். ஸ்மித் (5) ரன் அவுட்டாக, பட்லரும் (16) அணியை கைவிட்டார். உத்தப்பா (18), சாம்சன் (26) கிளம்ப, கடைசி 30 பந்தில் 65 ரன் தேவைப்பட்டது. ரியான் பராக், டிவாட்டியா இணைந்து சந்தீப் வீசிய 17 வது ஓவரில் 18 ரன் எடுக்க, போட்டி ராஜஸ்தான் பக்கம் திரும்பியது.

நடராஜன் வீசிய 19வது ஓவரில் டிவாட்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, வெற்றி உறுதியானது. கடைசியில் கலீீல் பந்தில் பராக் ஒரு சிக்சர் அடிக்க, ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவாட்டியா (45), பராக் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.

Tags :
|
|