Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு

By: Karunakaran Sat, 17 Oct 2020 4:48:24 PM

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு

13வது ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணியிலும் திறமையான வீரர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்துள்ளதால், இன்று வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளதால், அந்த அணியும் பலத்துடன் இருக்கும்.

rajasthan,batting.bangalore,ipl2020 ,ராஜஸ்தான், பேட்டிங், பெங்களூர், ஐபிஎல்2020

ராஜஸ்தான் ராயல் அணியில், 1. பென் ஸ்டோக்ஸ், 2. ஜோஸ் பட்லர், 3. ஸ்டீவ் சுமித் 4. சஞ்சுவ் சாம்சங், 5. ராபின் உத்தப்பா, 6. ரியன் பராக், 7. ராகுல் தேவாட்டியா, 8. ஆர்ச்சர், 9. ஸ்ரேஷ் கோபால், 10. ஜெயதேவ் உதான்கட், 11. கார்த்திக் தியாகி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பெங்களூரு அணியில் 1. ஆரோன் பிஞ்ச், 2.தேவ்தத் படிக்கல், 3. விராட் கோலி, 4. ஏபி டிவில்லியர்ஸ், 5. குர்கித்ரட் சிங் மன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கிரிஸ் மோரிஸ், 8. ஷபாப் அகமது, 9. உடாணா, நவ்தீப் சைனி, சாஹல் போன்ற வீரர்கள் உள்ளனர்.

Tags :