Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

By: Karunakaran Thu, 24 Sept 2020 7:53:15 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

13-வது ஐபில் போட்டியின் 6-வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யப்படவுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், 1. கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

royal challengers bangalore,kings xi punjab,ipl,uae ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐபிஎல், யுஏஇ

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 1. தேவ்தத் படிக்கல் , 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. ஜோஷ் பிலிப், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. உமேஷ் யாதவ், 10. டேல் ஸ்டெயின், 11. சாஹல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஜோர்டான், கிருஷ்ணப்பா கவுதம் நீக்கப்பட்டு முருகன் அஸ்வின், ஜேம்ஸ் நீசம் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விட்டதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முழு முயற்சியில் ஈடுபடும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆரோன் பிஞ்ச், விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

Tags :
|