Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ருத்துராஜ் கெய்க்வாட் இளம் வயது விராட் கோலியை நினைவு படுத்துகிறார் - டு பிளிஸ்சிஸ்

ருத்துராஜ் கெய்க்வாட் இளம் வயது விராட் கோலியை நினைவு படுத்துகிறார் - டு பிளிஸ்சிஸ்

By: Karunakaran Tue, 03 Nov 2020 08:37:28 AM

ருத்துராஜ் கெய்க்வாட் இளம் வயது விராட் கோலியை நினைவு படுத்துகிறார் - டு பிளிஸ்சிஸ்

இந்த சீசனில் ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறிவிட்டது. இருப்பினும் சிஎஸ்கே அணி தன்னுடைய கடைசி 3 போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பெற்று, ரசிகர்களை ஆறுதலடைய செய்துள்ளது. இந்த மூன்று போட்டியிலும் தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

தொடக்கத்தில் ருத்துராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்ட இரண்டு போட்டிகளில் ஒன்றில் டக் அவுட், ஒன்றில் சொற்ப ரன்னிலும் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதியில் அசத்தி நல்ல பெயரை வாங்கியுள்ளார் ருத்துராஜ். இதனால் அவரை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

ruthuraj kejriwal,virat kohli,du plessis,ipl 2020 ,ருதுராஜ் கெஜ்ரிவால், விராட் கோஹ்லி, டு பிளெசிஸ், ஐபிஎல் 2020

இந்நிலையில் இதுகுறித்து சி.எஸ்.கே. பேட்ஸ்மானான டு பிளிஸ்சிஸ் கூறுகையில், இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. ஆனால், நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம். எங்களுடைய அணியில் விளையாடும் ருத்துராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார் என்று கூறினார்.

மேலும் அவர், நெருக்கடியான நேரத்தில் நின்று விளையாடுகிறார் என எனக்கு தோன்றுகிறது. இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இதுபோன்ற தகுதிகளே தேவையாக உள்ளது. எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மிச்சமிருக்கிறது. முழுவதும் ஃபிட்டாகவே இருக்கிறேன். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன் என்று கூறினார்.

Tags :