Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி - ஷாஹித் அப்ரிடி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி - ஷாஹித் அப்ரிடி

By: Karunakaran Tue, 04 Aug 2020 5:16:36 PM

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி - ஷாஹித் அப்ரிடி

தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்கவுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை பாகிஸ்தான் இங்கிலாந்து சென்றபோது, இரண்டு முறையும் தொடரை டிரா செய்தது.

தற்போது இந்தத் தொடரையும் டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் போட்டி என்று வரும்போது இங்கிலாந்து சூழ்நிலை மிகவும் கடினமானது. பாகிஸ்தான் அணி டிரா செய்தாலே அது மிகப்பெரிய என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

shahid afridi,pakistan,test series,england ,ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான், டெஸ்ட் தொடர், இங்கிலாந்து

டிரா வெற்றிக்கு சமமானது. தற்போதுள்ள அணி நிர்வாகம் அணிக்கு மிகப்பெரிய பலம். செசனுக்கு செசன் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என்ற உறுதி தனக்குள்ளதாக ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். கொரோனாவுக்கு மத்தியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத வுள்ளன.

மிஸ்பா-உல்-ஹக் (தலைமை பயிற்சியாளர்) மற்றும் யூனிஸ் கான் (பேட்டிங் பயிற்சியாளர்), வக்கார் யூனிஸ் (பந்து வீச்சு பயிற்சியாளர்), முஷ்டாக் அகமது ஆகியோர் பாகிஸ்தான் அணியுடன் உள்ளனர். இதனால் போட்டியின் போது அவர்கள் சிறந்த அறிவுரை வழங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :