Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

By: Karunakaran Sat, 07 Nov 2020 07:41:54 AM

ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்


ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று நேற்று அபு தாபியில் நடைபெற்றதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகாவிற்கு பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டார்.

தேவ்தத் படிக்கல் உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார். 3.3 ஓவரில் 15 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது. 3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது என்றாலும் 41 ரன்களே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

sunrisers hyderabad,rcb,qualifier 2,ipl 2020 ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்.சி.பி., தகுதி 2, ஐ.பி.எல் 2020

டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வார்னர், கோஸ்வாமி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வார்னர் - மணிஷ் பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி தீர்மானித்தது. ஆனால் 5.4 ஓவரில் 43 ரன்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வார்னர் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஐதராபாத் 1 ரன் எடுத்தது, 2-வது பந்தில் ரன் கிடைக்கவில்லை. 3-வது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் ஹோல்டர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 44 பந்தில் 50 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 20 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags :
|