Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஜப்பான் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்

ஜப்பான் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்

By: Nagaraj Thu, 19 Nov 2020 3:51:02 PM

ஜப்பான் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்

ஜப்பானில் நடக்கும் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் தமிழக வீரர் சத்யன் பங்கேற்கிறார்.

இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ஜி.சத்யன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இந்திய அளவில் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ளார்.

hope,chennai,sathyan,ohio,league match ,நம்பிக்கை, சென்னை, சத்யன், ஒகியாமா, லீக் போட்டி

ஜப்பானில் உள்ள ஒகியாமாவில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் பங்கேற்கிறார். இதற்காக வருகிற 23-ந் தேதி ஜப்பான் புறப்பட்டு செல்கிறார். சத்யன் தனது கிளப்புக்காக 8 ஆட்டங்களில் விளையாடுகிறார்.

இதுகுறித்து சத்யன் கூறுகையில், நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த போட்டியில் ஜப்பான், கொரியாவை சேர்ந்த முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்கள் பங்கேற்பார்கள். என்னால் சில வீரர்களை தோற்கடித்து அதிர்ச்சி அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Tags :
|
|