Advertisement

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று 100-வது போட்டி

By: Karunakaran Sat, 26 Dec 2020 3:19:27 PM

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று 100-வது போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையேயான 100-வது போட்டியாகும். இரு அணிகள் மோதிய டெஸ்ட போட்டியில் இது 7-வது அதிகபட்சமாகும். ஒரு அணியுடன் இந்தியா 2-வது முறையாக 100-வது டெஸ்டில் விளையாடுகிறது.

இங்கிலாந்துடன் 122 டெஸ்டில் விளையாடி உள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக 351 டெஸ்டில் மோதி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் 160 டெஸ்டில் விளையாடி உள்ளன. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்டில் இந்தியா 28-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

100th test match,india,australia,boxing day match ,100 வது டெஸ்ட் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா, குத்துச்சண்டை நாள் போட்டி

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா 153 டெஸ்டிலும், இந்தியா -இங்கிலாந்து 122 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 116 டெஸ்டிலும், இங்கிலாந்து-நியூசிலாந்து 105 டெஸ்டிலும் மோதியுள்ளன. இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1947-ம் ஆண்டு முதல் டெஸ்டில் விளையாடியது.

அப்போது லாலாஅமர்நாத் கேப்டனாக இருந்தார். 25-வது டெஸ்டுக்கு பட்டோடியும், 50-வது டெஸ்டுக்கு அசாருதீனும், 75-வது டெஸ்டுக்கு கும்ப்ளேயும் கேப்டனாக பணியாற்றினர். தற்போது 100-வது டெஸ்டில் ரகானே கேப்டனாக உள்ளார்.

Tags :
|